மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
x
அமெரிக்காவின் FLORIDA மாகாணத்தில்  நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் , மேற்கிந்திய தீவுகள் வீரர் கேம்பல் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் பின்னர் இந்திய வீரர்கள் துல்லியமாக பந்துவீச, மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. அறிமுக போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் நவதீப் சைனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்களும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் 17 புள்ளி 2வது ஓவரில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது டி 20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்