டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் காஞ்சி வீரன்ஸை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது வெற்றி
x
நத்தத்தில் நடைபெற்ற இந்த  போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறினாலும் அடுத்து வந்த கவுசிக் காந்தி,சசிதேவ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்,. இறுதியில் ஹரிஷ் 20 பந்துகளில் 53 ரன்கள் விளாச சேப்பாக் அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ் அணி 19 புள்ளி 2  ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோவை கிங்ஸை வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ் : அருண் கார்த்திக் அதிரடி சதம்

டி,என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் , மதுரை பாந்தர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை தோற்கடித்தது.

நத்தத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள்  குவித்தது. அதிரடியாக ஆடிய அருண் கார்த்திக் 106 ரன்கள் விளாசினார். நடப்பு டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்., இதனையடுத்து 196 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் வீரர்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடாமல் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தனர். இறுதியாக 20 ஓவர்களில் கோவை அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சதம் விளாசிய அருண் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்