டி.என்.பி.எல்.- தூத்துக்குடி அணி திரில் வெற்றி

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை எதிர்கொண்ட தூத்துக்குடி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
டி.என்.பி.எல்.- தூத்துக்குடி அணி திரில் வெற்றி
x
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடந்த இந்த போட்டி, மழை குறுக்கிட்டதால், கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் போட்டி13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் களமிறங்கிய தூத்துக்குடி அணி, அதிரடி ரன் குவிப்பில் இறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில், அந்த அணி, 155 ரன்கள் குவித்த‌து. அதிகபட்சமாக கேப்டன் சுப்ரமணிய சிவா 44 ரன்கள் எடுத்தார். கோவை அணியின் அந்தோனி தாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய கோவை அணியில் முதல் மூன்று விக்கெட்டுகள் அடுத்த‌டுத்து வீழ்ந்த‌ன. இருந்தபோதும், அந்தோனிதாஸ் மற்றும் ஸ்ரீ நாத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்ற முயற்சித்தனர். குறிப்பாக 7 சிக்சர்கள் பறக்கவிட்ட அந்தோனி தாஸ்  26 பந்துகளில், 63 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். ஆனால் கடைசி நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 13 ஓவர்கள் முடிவில் கோவை அணி 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்த‌து. இதனால் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்தோனி தாஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்