ஒலிம்பிக் 2020 போட்டிகளின் பதக்கங்கள் வெளியீடு...

ஜப்பானின், டோக்கியோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட உள்ள பதக்கங்கள் வெளியிடப்பட்டது.
ஒலிம்பிக் 2020 போட்டிகளின் பதக்கங்கள் வெளியீடு...
x
ஜப்பானின், டோக்கியோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட உள்ள பதக்கங்கள் வெளியிடப்பட்டது. முப்பரிமாண வளைவுகளை கொண்ட இந்த பதக்கங்கள் பளபளப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பதக்கங்களில், கிரீக் புராணங்களில் வெற்றியின் கடவுளாக கருதப்படும், "நைக்" கடவுள் ஒரு புறமும், மறுபுறம் ஒலிம்பிக் வளையங்களுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது. 556 கிராம் எடையுடன் தங்க பதக்கமும், 550 கிராம் எடையுடன் வெள்ளி பதக்கமும், 450 கிராம் எடையுடன் வெண்கல பதக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்