கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன.
கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி : வைஷ்ணவா, லயோலா கல்லூரி அணிகள் வெற்றி
x
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சுழற் கோப்பைக்கான, கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரி அணியும் வெற்றிபெற்றன. போட்டிகள் கடந்த 17- ஆம் தேதி முதல் ஜிம்கானா கிளப் ராமகிருஷ்ணா நினைவு மின்னொளி மைதானத்தில் நடைபெற்று வந்தன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற நிலையில், பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி வைஷ்ணவா கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் ஜெயின் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி, லயோலா கல்லூரி அணியும் கோப்பையை வென்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்