காமன்வெல்த் போட்டி : டேபிள் டென்னிஸ் - இந்தியா அசத்தல்

காமன்வெல்த் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர்.
காமன்வெல்த் போட்டி : டேபிள் டென்னிஸ் - இந்தியா அசத்தல்
x
காமன்வெல்த் போட்டிகளில், இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவினர் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர். ஒடிசா மாநிலம் காட்டாங்கில் நடைபெறும் இந்த போட்டியில், நேற்றைய தினம் இறுதி ஆட்டம் நடைபெற்றது. ஆண்கள் , மகளிர்  என இரு பிரிவிலும் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இரு பிரிவிலும் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆண்கள் பிரிவில் நடப்பு சேம்பியனான இந்தியா, 3க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை போராடி வீழ்த்தியுள்ளது. அதேபோல, 3 க்கு 0 என்ற புள்ளி கணக்கில், மகளிர் பிரிவிலும் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்