ஒரே நாளில் செரினாவுக்கு இரண்டு வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஒரே நாளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று செரினா அசத்தியுள்ளார்.
ஒரே நாளில் செரினாவுக்கு இரண்டு வெற்றி
x
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு, உலகின் முன்னிலை வீராங்கனை, செரினா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். லண்டனில் நடைபெறும் இந்த தொடரின் காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் செரினா, சக நாட்டு வீராங்கனையான அலிசன் ரிஸ்கியை (ALISON RISKE) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதியில் 6-4,4-6,6-3 என்ற செட் கணக்கில் செரினா வெற்றி பெற்றார்

மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய பின்னர், கலப்பு இரட்டையர் ஆட்டத்தில், பிரிட்டனின் ஆண்டி முர்ரே உடன் கைகோர்த்து, செரினா களமிறங்கினார். 2வது சுற்றில் பிரான்ஸின் மார்டின் மற்றும் அமெரிக்காவின் அட்டாவோ ஜோடியை, செரினா, முர்ரே ஜோடி எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரினா, முர்ரே, ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறியது. ஒரே நாளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று செரினா அசத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்