ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. பொறுப்பாக விளையாடிய பிஞ்ச் 116 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44 புள்ளி 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதுடன் அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
Next Story