ஸ்டீவன் ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றையை போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்துக்காக விராட் கோலி குரல் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டீவன் ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி...
x
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றையை போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்துக்காக விராட் கோலி குரல் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இந்திய ரசிகர்கள் சிலர்   ஸ்டீவன் ஸ்மித்தை பார்த்து ஏமாற்றுக்காரர் என கிண்டலடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோலி ரசிகர்களை கண்டித்தார். கோலியின் பெருந்தன்மையை பார்த்த ஸ்மித் அவரை தட்டிக்கொடுத்தார். செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து பேசிய விராட் கோலி, என்றைக்கோ செய்த தவறை இப்போது குத்திக்காட்டுவது சரியான அனுகுமுறை கிடையாது என கூறினார். இதுபோன்ற தவறுகளை செய்ய வேண்டாம் எனவும் விராட் கோலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்