ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் : 13 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் 2 தங்கம் வென்றுள்ளது.
ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் : 13 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்
x
பாங்காங்கில் நடைபெற்ற மகளிருக்கான 81 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, சீன வீராங்கனை லீனாவை எளிதில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதே போன்று ஆடவருக்கான 52 கிலோ எடைப் பிரிவில் அமித் பாங்கல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போன்று தீபக் சிங், கவிந்தர் சிங், ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர். இந்த தொடரில் 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 13 பதக்கங்களை கைப்பற்றியது. 

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் : சாக்சி மாலிக், வினேஷ் ஆகியோருக்கு வெண்கலம் 
சீனாவில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகட் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். ஷியான் மாகாணத்தில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் சீன வீராங்கனை பாங்கை வீழ்த்தி வினேஷ் போகட் வெண்கலம் வென்றார். 
இதே போன்று 62 கிலோ எடைப் பிரிவில் தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்த தொடரில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்