மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டம் - சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டம் - சென்னை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
x
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தோனி காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. சென்னை அணியின் கேப்டனாக களமிறங்கிய ரெய்னா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 67 ரன்கள் எடுக்க அந்த அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, ராயுடு, ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்கம் ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக தமிழக வீரர் முரளி விஜய் 38 ரன்கள் எடுக்க, சென்னை அணி 109 ரன்களை மட்டுமே எடுத்து , 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நடப்பு சீசனில் சொந்த மண்ணில் சென்னை அடையும் முதல் தோல்வி இதுவாகும்.

Next Story

மேலும் செய்திகள்