தோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

தோகாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
தோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து
x
கத்தார் தலைநகர் தோகாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளில் 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து களமிறங்கினார். களத்தில் துடிப்பின் செயல்பட்ட கோமதி மாரிமுத்து முதலிடம் பிடித்து இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்தார். உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ள தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்