போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு
பதிவு : ஏப்ரல் 22, 2019, 07:39 AM
பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.
பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது. முதலில் ஆடிய பெங்களூரு அணியில், பார்த்திவ் படேல் மட்டும் அரைசதம் கடந்தார். அவரை தொடர்ந்து மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த‌தால், 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த‌து. 162 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கி சென்னை அணி தொடக்க ஆட்டக்கார‌ர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுளை பறிகொடுத்தனர். இதை தொடர்ந்து வந்த ரெய்னாவும், முதல் பந்திலே வெளியேற சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் களமிறங்கிய தோனி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துசென்றார். இறுதி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள்  பறக்க விட்டார் கேப்டன் தோனி. ஆனால் இறுதி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தாகூர் ரன்அவுட் செய்யப்பட்டார். தோனியின் அதிரடி ஆட்டம் வீணாக போனதாக ரசிகர்கள் சிலர் அதிருப்தி அடைந்த போதும்,  தனி ஆளாக தோனியின் பேட்டிங் அனைத்து நாட்டு ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

70 views

உலகிலே அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடருக்கு வயது 12

இந்தியா மட்டுமின்றி பல உலக நாட்டு ரசிகர்களையும், வீர‌ர்களையும் ஈர்க்கும் ஐ.பி.எல் உருவான தினம் இன்று.... 2008 ஆம் ஆண்டில் உருவாகி, கிரிக்கெட் ரசிகர்களால் திருவிழாவாக கொண்டாடப்படும், ஐ.பி.எல் போட்டி, இன்று தன் 12 வது வயதை நிறைவு செய்துள்ளது

51 views

பிற செய்திகள்

சி.எஸ்.கே. வீரர் வெளியிட்ட அசத்தல் வீடியோ..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர், அந்தரத்தில் push up செய்து அசத்தியுள்ளார்.

13 views

தோனி ஓய்வா? - சமூக வலைத்தளத்தில் தீப்போல் பரவிய வதந்தி

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்தி பரவியது.

35 views

ஊரடங்கு காலத்தில் வீரர்களுக்கு பயிற்சி அளித்த டிராவிட்...

ஊரடங்கு காலத்தில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மனோதத்துவ பயிற்சிகளை வல்லுநர்களைக் கொண்டு வழங்கியதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

45 views

நடிகர் சோனு சூட்க்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு

பாலிவுட் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப எடுத்துவரும் நடவடிக்கைக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

10 views

இந்தியா, ஆஸி கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிப்பு..!!

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

356 views

நிதி நெருக்கடியில் நியூசி. கிரிக்கெட் வாரியம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.