ஐ.பி.எல். டெல்லி vs கொல்கத்தா : டெல்லி அணி வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
ஐ.பி.எல். டெல்லி vs கொல்கத்தா : டெல்லி அணி வெற்றி
x
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த  கொல்கத்தா அணி , 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மான் கில் 65 ரன்கள் எடுத்தார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.5 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் 97 ரன்கள் எடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்