எப்படி இருக்கும் இன்றைய பஞ்சாப் Vs டெல்லி ஆட்டம் ?

ஐ.பி.எல். தொடரில் இன்று பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன.
x
ஐ.பி.எல். தொடரில் இன்று பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடைபெறுகிறது. பஞ்சாப் அணியின் பலமாக கிறிஸ் கெயில் விளங்குகிறார். இன்றைய ஆட்டத்திலும் அவர் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரருமான கே.எல். ராகுலும் பார்ம்க்கு திரும்பியது, அந்த அணிக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது. எனினும் பந்துவீச்சில் அந்த அணி கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. டெல்லி அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா, கடந்த ஆட்டத்தில் 99 ரன்கள் குவித்து பார்ம்க்கு திரும்பியுள்ளார். 

கடந்த போட்டியில் ஜொலிக்க தவறிய ரிஷப் பண்ட், இன்றைய ஆட்டத்தில் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் டெல்லி அணி திரில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 13 முறையும், டெல்லி அணி 9 முறையும் வென்றுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்