ஐ.பி.எல் - அஸ்வின் செய்தது சரியா?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பட்லரை அஸ்வின் ரன் அவுட் செய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் - அஸ்வின் செய்தது சரியா?
x
மான்கட்  கிரிக்கெட் போட்டியில் மிக சர்ச்சையான குழப்பமான ரன் அவுட் செய்யும் முறை. இதனை முதல் முறையாக செய்தது இந்திய வீரர் வினோத் மான்கட். 1947ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது வினோத் மான்கட், பந்துவீசாமல் ரன்அவுட் செய்தார். இதனையடுத்து, இந்த முறைக்கு மான்கட் என்ற பெயர் வந்தது. அஸ்வின் இந்த சர்ச்சையில் சிக்கியது இது முதல் முறை அல்ல. 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் போது திரிமானேவை அஸ்வின் அவுட் செய்தார். ஆனால் அன்றைய போட்டியில் கேப்டனாக இருந்த சேவாக் திரிமானேவை விளையாட அனுமதித்தார். இதே போன்று ஜாஸ் பட்லருக்கும் இப்படி ஆட்டமிழப்பது புதிது அல்ல. ஏற்கனவே இலங்கைக்கு எதிரான போட்டியின் போது மான்கட் முறையில் அவர் ஆட்டமிழந்துள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூட மான்கட் முறையில் தென்னாப்பிரிக்க வீரர் கிரிஸ்டனை ஆட்டமிழக்க செய்துள்ளார். ஆனால், ரன் அவுட் செய்வதற்கு முன் எச்சரிக்கை செய்துவிட்டு, அதே தவறை திரும்பவும் கிறிஸ்டன் செய்த பின்பு தான்  கபில் தேவ் அவரை ஆட்டமிழக்க செய்தார். ஐ.சி.சி.யின் புதிய விதிப்படி, பேட்ஸ்மேன்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல் இப்படி ரன் அவுட் செய்யலாம். இதனால் அஸ்வின் செய்தது விதிப்படி தவறு இல்லை. இருப்பினும், பந்தை வீசுவது போல் நாடகமாடி பட்லர் கோட்டை விட்டு செல்லும் வரை காத்திருந்து அவுட் செய்தது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மான்கட் முறை சிறு பிள்ளைதனமானது என்பதால் பெரும்பாலான வீரர்கள் இந்த முறையை கையாள்வது இல்லை. விளையாட்டின் கண்ணியமான முறைக்கு எதிரான இந்த மான்கட் முறையை தவறு என்று ஐ.சி.சி. அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்