கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்த சென்னை : தோனி காலில் விழுந்த ரசிகர்கள்

ஐ.பி.எல். தொடர் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்த சென்னை : தோனி காலில் விழுந்த ரசிகர்கள்
x
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பொறுப்புடன் விளையாடிய தவான் 51 ரன்கள் எடுத்தார். அதிரடி வீரர் பண்ட் 25 ரன்களில் வெளியேற, டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள மட்டுமே எடுத்தது.சென்னை அணியின் பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்கம் அதிரடியாக இருந்தது. வாட்சன் 44 ரன்களிலும், ரெய்னா 30 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் கேப்டன் தோனி மற்றும் ராயுடு பொறுமையாக விளையாடி ரன் சேர்க்க, சென்னை அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்த தோனியின் காலில் சில ரசிகர்கள விழுந்து ஆசி பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்