பாக். அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் : ஆஸி. அணியில் ஸ்மித், வார்னர் இல்லை

தடை முடிந்தும் அணியில் இடம்பெறவில்லை, உலகக் கோப்பையில் பங்கேற்பதில் சந்தேகம்
பாக். அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்  : ஆஸி. அணியில் ஸ்மித், வார்னர் இல்லை
x
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பங்கேற்கும் ஒருநாள் தொடரில் ஸ்மித்,வார்னர் இடம்பெறவில்லை.இதனால்,உலகக் கோப்பையில் அவர்கள் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்னது.பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித்,வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.தடை இம்மாதத்துடன் முடிவடையும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்மித், வார்னர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தேர்வுக் குழுவினர், இவ்விரு வீரர்களையும் புறந்தள்ளியுள்ளனர்.இதனால் முக்கிய வீரர்கள் இல்லாமல் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

Next Story

மேலும் செய்திகள்