இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : ராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : ராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய வீரர்கள்
x
ராஞ்சியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசி வருகிறது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் களமிறங்கியுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா அதிரயாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 193  ரன்கள் சேர்த்த நிலையில், பிஞ்ச் 93 ரன்களில் வெளியேறினார். சற்று முன்பு வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்