ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலி 40வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது
x
நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே ரோகித் சர்மா டக் ஆவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.  தவான் 21 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 18 ரன்களிலும் வெளியேற. அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கர் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். தோனி டக் அவுட்டாக பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கோலி சர்வதேச ஒருநாள் போட்டியில் 40வது சதத்தை பூர்த்தி செய்தார். கோலி 116 ரன்களில் வெளியேற 48 புள்ளி 2வது ஓவரில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்