முதல் இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டி : போராடி தோற்றது இந்தியா - கடைசி பந்தில் வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்துள்ளது.
முதல் இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டி : போராடி தோற்றது இந்தியா - கடைசி பந்தில் வென்றது ஆஸ்திரேலியா
x
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்கார‌ர் லோகேஷ் ராகுல் மட்டும் அரை சதம் அடித்தார். மற்ற வீர‌ர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்கள் மட்டுமே எடுத்த‌து. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ் வெல் அரைசதம் கடந்தார். கடைசி 2 ஓவர்களுக்கு 15 ரன்கள் தேவைபட்டபோது, பும்ரா சிறப்பாக பந்துவீசி 1 ரன் மட்டுமே விட்டு கொடுத்தார்.இதனால் இந்திய அணி வென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்த‌து. இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவைபட்ட நிலையில், உமேஷ் யாதவ் இரண்டு பவுண்டரிகளை விட்டுக்கொடுத்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இறுதி பந்தில் அதிவேகமாக 2 ரன்கள் ஓடி, ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்