இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன..?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் படுதோல்வி, ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன..?
x
வெலிங்டனில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி போராடாமலேயே படுதோல்வியை தழுவியது. இந்திய அணியின் பந்துவீச்சும், ஃபில்டிங்கும் மோசமாக இருந்ததால் நியூசிலாந்து அணி ரன் குவிக்க ஏதுவாக அமைந்தது. 

* இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருவர் கூட SLOW BALL வீசவில்லை. மேலும் YORKER வீசவும் முயற்சிக்கவில்லை. இதுதவிர இந்திய அணி வீரர்கள் கைக்கு வந்த கேட்சை கூட விட்டனர். இந்த தவறை சரிக் கட்டி இருந்தால் நியூசிலாந்தை 180 ரன்களில் சுருட்டி இருக்கலாம்.  இதே போன்று கேப்டனாக ரேஹித் சர்மா முதல் பந்தே சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

*  தவான், விஜய் சங்கர் ஆகியோர் அதிரயாக விளையாடினாலும், நிலைத்து நிற்க தவறிவிட்டனர். மேலும் 3வது வீரராக விஜய் சங்கருக்கு பதிலாக ரிஷப் பண்ட் களமிறங்கி இருந்தால், அது இந்திய அணிக்கு சரியான வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் பவர் பிளே முடிந்த பிறகே ரிஷப் பண்ட் களமிறங்கியதால், அவரால் ரன் குவிக்க முடியவில்லை.  அதிரடியை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவும், WIDE சென்ற பந்தை அடித்து ஆடி கேட்ச் ஆனார். திமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும், தமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தார். 

* நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்தியா ஒரு டி20 போட்டியில் கூட வென்றதில்லை. இந்தியா செய்த தவறுகளை சரி செய்தாலே, கோலி இல்லாமலேயே இந்திய அணி வென்றுவிடும். 2வது டி 20 போட்டி வரும் நாளை நடைபெற உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்