தரையில் படுக்க வைக்கப்பட்ட பந்தய வீரர்கள் : தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அவலம்

குடோனில் தங்கிய விளையாட்டு வீரர்கள்
தரையில் படுக்க வைக்கப்பட்ட பந்தய வீரர்கள் : தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அவலம்
x
தேசிய சைக்கிள் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க வந்த வீரர்கள் கடுங்குளிரில் குடோன் தரையில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சைக்கிள் சாம்பியன்ஷிப் பந்தயம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க 600க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்துள்ளனர். ஆனால், வீரர்கள் தங்குவதற்கு எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால், ஜெய்ப்பூரில் உள்ள மைதானத்தில் சுகாதார சீர்கேட்டுடன் உள்ள குடோனில் வீரர்கள் தங்க வைக்கப்பட்டனர். வசதி படைத்த வீரர்கள் மட்டும் நட்சத்திர விடுதிகளில் தங்க சென்றனர். இந்த சம்பவம், விளையாட்டு ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்