ஐ.சி.சி. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் : அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி.

ஐ.சி.சி. உலகக் கோப்பை இருபது ஓவர் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் : அட்டவணையை வெளியிட்டது ஐ.சி.சி.
x
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் 2 வில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் 1ல், நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகளுடன் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் உள்ளன. அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. இம்முறை லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்