ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : 10வது முறையாக காலிறுதிக்கு ஜோகோவிச் தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : 10வது முறையாக காலிறுதிக்கு ஜோகோவிச் தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனிலை 6-4, 6-7,6-2 ,6-3 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச் 10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அரையிறுதிக்கு கிரேக்க வீரர் ஸ்டெஃபனோஸ் தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு கிரேக்க வீரர் STEFANOS தகுதி பெற்றுள்ளார். 20 வயதான STEFANOS 4வது சுற்றில் 6 முறை சாம்பியனான ஃபெடரை வீழ்த்தியதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டாவை 7-5, 4-6,6-4,7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஸ்டெஃபனோஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
Next Story