ஹோப்மேன் கப் - முதல் முறையாக மோதிய பெடரர் , செரீனா
ஹோப்மேன் கப் டென்னிஸ் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக பெடரர் மற்றும் செரீனா ஆகியோர் கலப்பு இரட்டையர் பிரிவில் மோதிக்கொண்டனர்.
1973 ஆம் ஆண்டுக்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டி இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, பெடரர் அமெரிக்க வீரர் டியாஃபோவையும், செரீனா, கிரீஸ் வீராங்கணை மரீயா சக்காரியை வீழ்த்தினர். அதன் பின் பெடரர் , பிளிண்டா பென்சிக் ஜோடி, செரீனா டியாஃபோ ஜோடியுடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், பெடரர் மற்றும் பிளிண்டா ஜோடி, 4-2 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெடரர் ரசிகர்களும், செரீனா ரசிகர்களும் போட்டி போட்டு உற்சாகப்படுத்தியதால், போட்டி, ஆரம்பம் முதல் இறுதி வரை, ஆடுகளம் கரவொலியால் அதிர்ந்தது. இறுதியில், செரீனாவும், பெடரரும் செல்பி எடுத்துகொண்டு புன்னகையுடன் விடை பெற்றனர்.
Next Story