2019-ல் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்

2019-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
2019-ல் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்
x
2019-ல் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை  தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால் இந்திய அணி குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே பங்கேற்கிறது. 

அதன்படி இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளிலும்,  28 ஒருநாள் மற்றும் 11  இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

சொந்த மண்ணில் இந்திய அணி,  ஆஸ்திரேலியா அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டியிலும், 

தென் ஆப்ரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.

வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது. 

வெளிநாட்டில் ஆஸ்திரேலியா அணியுடன்  1 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும், நியூசிலாந்து அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும்,  மேற்கிந்தியா தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் இந்தியா விளையாடுகிறது

Next Story

மேலும் செய்திகள்