இந்தியா-ஆஸ்திரேலியா முன்றாவது டெஸ்ட் : ஆஸி அணியில் 7 வயது சிறுவன்

இந்திய அணிக்கு எதிராக மெல்போனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 வயது சிறுவன் ஒருவன் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்தியா-ஆஸ்திரேலியா முன்றாவது டெஸ்ட் : ஆஸி அணியில் 7 வயது சிறுவன்
x
இந்திய அணிக்கு எதிராக மெல்போனில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 வயது சிறுவன் ஒருவன் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளான்.

இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 7 வயதான ஆர்ச்சி ஸ்கில்லர்  என்ற சிறுவன் 15-வது வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவன் சேர்க்கப்பட்டதற்கு அவனது உடல்நிலைதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இருதய கோளாறு காரணமாக அந்த சிறுவனுக்கு இதுவரை 13 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஆயுள்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாவதே தனது கனவு என தெரிவித்துள்ளான். இதனையடுத்து அந்த சிறுவன் ஆஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டு, இணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளான். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கி விக்கெட் எடுப்பேன் என்று அந்த சிறுவன் நம்பிக்கை தெரிவித்துள்ளான்.

Next Story

மேலும் செய்திகள்