சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கம்பீர் ஓய்வு...

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கம்பீர் ஓய்வு...
x
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கனத்த இதயத்துடன் ஓய்வு பெறும் முடிவை தாம் எடுத்துள்ளதாக கம்பீர் தெரிவித்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் , 2007 ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2011-ல் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல கம்பீர் முக்கிய பங்கு ஆற்றியவர். 58 டெஸ்ட் போட்டிகளில் 4 ஆயிரத்து 154 ரன்களும்,  147 ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரத்து 238 ரன்களும், 37 டி20 போட்டிகளில் 932 ரன்களையும் கம்பீர் விளாசியுள்ளார். கம்பீர் ஓய்வு பெற்றதை அடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்