விஸ்வரூபம் எடுத்த மித்தாலி ராஜ் சர்ச்சை....

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் அரையிறுதி சுற்றில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முக்கிய ஆட்டத்தில் மித்தாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விஸ்வரூபம் எடுத்த மித்தாலி ராஜ் சர்ச்சை....
x
* கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கிற்கும், மித்தாலி ராஜ்%க்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே, மித்தாலி ராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

* இந்த நிலையில், மித்தாலி ராஜ் பி.சி.சி.ஐ.க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பயிற்சியாளர் ரமேஷ் பவார், மற்றும் டயானா ஆகியோர் தம்மை அவமானப்படுத்திவிட்டடதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

* பயிற்சியாளராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ரமேஷ் பவார் அணியிலிருந்து தன்னை நீக்கியதாக மித்தாலி ராஜ் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

* இதனையடுத்து, பயிற்சியாளர் ரமேஷ் பவாரிடமிருந்து விளக்கம் கேட்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. அணியின் சீனியர் வீராங்கனை என்று மித்தாலி ராஜ் சில சலுகைகளை அனுபவித்தாரா இல்லை, சீனியர் வீராங்கனையை அலட்சியமாக ரமேஷ் பவார் கையாண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்