மகளிர் உலக கோப்பை 20 ஓவர் போட்டி : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

மகளிர் உலக கோப்பை 20 ஓவர் தொடரில் இன்று இந்திய மகளிர் அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது.
மகளிர் உலக கோப்பை 20 ஓவர் போட்டி : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
x
* மகளிர் உலக கோப்பை 20 ஓவர் போட்டித் தொடர், வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள கயானாவில் நடைபெற்று வருகிறது.  மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதும் இந்த தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

* இந்த நிலையில், இந்திய மகளிர் அணி இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. கயானா புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 52 ரன் வித்தியாசத்தில் தோற்றதால், இந்த போட்டியில் வெற்றிபெற போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்