ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
x
ஆசியன் சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி தொடரின் லீக் போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில், பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
ஓமனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் நிமிடத்திலே, பெனால்டி கார்னர் வாய்ப்பில் பாகிஸ்தான் வீரர் இர்பான், கோல் அடித்தார். இதையடுத்து, 24வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கோல் அடிக்க 1க்கு 1 என்ற கோல் கணக்கில், முதல் பாதி சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதியின் துவக்கத்திலேயே, ரிவெர்ஸ் ஃப்லிக் முறையில், இந்திய வீரர் மன்தீப் சிங் கோல் அடிக்க, இந்தியா 2க்கு 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர், 42-வது நிமிடத்தில்,  தில்பிரீத் சிங் தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்