இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் - 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் - 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
x
ராஜ்கோட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 139 ரன்களும், பிரித்வி ஷா 134 ரன்களும், ஜடேஜா 100 ரன்களும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி,  இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் அந்த அணி பாலோ-ஆன் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி, 196 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 272 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்