மாணவர்களுக்கான அகில இந்திய "பீச் வாலிபால்" : தமிழக மகளிர் அணி சாம்பியன்

நாகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற அகில இந்திய பீச் வாலிபால் போட்டியில் தமிழக மாணவியர் அணி தெலங்கானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
மாணவர்களுக்கான அகில இந்திய பீச் வாலிபால் : தமிழக மகளிர் அணி சாம்பியன்
x
நாகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான அகில இந்திய பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத், தெலுங்கானா, டெல்லி என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தமிழக மாணவியர் அணி தெலங்கானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல மாணவர்கள் அணி, இறுதிபோட்டியில் டெல்லி அணியிடம் தோற்றதால், இரண்டாம் இடம்பிடித்த‌து. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பதக்கங்கள், கோப்பை வழங்கி பாராட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்