நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி - சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி - சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து அணி
x
இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் MARCUS RASHFORD 54வது நிமிடத்தில் கோல் அடித்தார். சுவிட்சர்லாந்து பதில் கோல் அடிக்காததால், இங்கிலாந்து அணி 1க்கு0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து - ஐஸ்லாந்தை வீழ்த்திய பெல்ஜியம் அணி
ஐஸ்லாந்துக்கு எதிரான ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.

ஐஸ்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் வீரர்கள் 3 கோல் அடிக்க, இறுதியில் 3க்கு0 என்ற கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. 

நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி - பிரேசில் அணி அபார வெற்றி
எல் சால்வடேர் (EL SALVADOR) அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நேமார் முதல் கோல் அடித்தார். இதனைத்தொடர்ந்து பிரேசில் வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடிக்க, 5க்கு0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்