இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவுற்றது. இந்தப் போட்டியில இந்திய வீரர்கள் செயல்பாட்டுக்கு தகுந்தவாறு எவ்வளவு மதிப்பெண் வழங்கலாம்...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?
x
இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக மதிப்பெண்  வாங்கி முதலிடத்தில் இருப்பது  கேப்டன் விராட் கோலி தான்.  593 ரன்கள் குவித்த அவர் 10க்கு 7 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார். 3 மதிப்பெண் எதில்  கேப்டனா விராட் கோலி கோட்டை விட்டார் என்றால் கேப்டன் பொறுப்பில் தான். சரியான அணியை தேர்வு செய்தயாதது, எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்த கையாண்ட உத்தி என கோலி தவறு செய்தார். 

அடுத்த இடத்தில் இருப்பது புஜாரா, 10க்கு 5 மதிப்பெண்கள் வாங்கியுள்ள புஜாரா 4 போட்டிகளில் 278 ரன்கள் சேர்த்தார். புஜாரா சதம் விளாசி இருந்தாலும், மற்ற 3 போட்டிகளிலும் ரன் சேர்க்க அவர் தவறிவிட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும், 10க்கு 5 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 5 போட்டிகளில் 299 ரன்கள் சேர்த்துள்ள ராகுல், கடைசி போட்டியில் சதம் விளாசினார். 

பேட்டிங்கை தவிர கே.எல். ராகுல், ஸ்லிப் கேட்சை பிராமதமாக பிடித்து அசத்தினார். 4வது இடத்தில் இருப்பது ரஹானே. அவர் வாங்கிய மதிப்பெண் 10க்கு வெறும் 3 தான். பேட்டிங்கில்பெரிதும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 போட்டியில் வெறும் 257 ரன்கள் தான் சேர்த்துள்ளார். கடைசி இடத்தில் இருப்பது தவான் தான்.  10 க்கு தவான் 2 மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளார். 4 போட்டிகளில் விளையாடி 162 ரன்கள் மட்டும் தான் தவான் சேர்த்துள்ளார்.  இந்த தொடரின் மூலம் இனி தவானின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே திரும்ப முடியாது என்று நிலை ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்