உலக கிளிஃப் டைவிங் தொடர் : கேரி ஹண்ட்க்கு 3 வது தொடர் வெற்றி

உலக கிளிஃப் டைவிங் தொடரில் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இங்கிலாந்து வீரர் கேரி ஹண்ட் வெற்றி பெற்றார்.
உலக கிளிஃப் டைவிங் தொடர் : கேரி ஹண்ட்க்கு 3 வது தொடர் வெற்றி
x
போஸ்னியா நாட்டில் உலக கிளிஃப் டைவிங் தொடர் நடைபெற்றது. ஆற்று பாலத்தின் செங்குத்தான உயரத்தில் இருந்து குதித்து, வீரர்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்தது.இதில் ஆறு முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இங்கிலாந்து வீரர் கேரி ஹண்ட், வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த தொடரில் தனது மூன்றாவது தொடர் வெற்றியை அவர் பதிவு செய்தார்.

மோஸ்டர் நகரில் நடைபெற்ற பெண்கள் பிரிவுக்கான போட்டியில் மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த அடிரியானா வெற்றி பெற்றார்.  நதி கரையோரத்தில் திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் போட்டியாளர்களை உற்சாகமூட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்