ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் : ஏழ்மையை தாண்டி சாதித்து காட்டிய பெண்
பதிவு : ஆகஸ்ட் 31, 2018, 09:03 AM
பல்வேறு தடைகளை தாண்டி ஆசிய விளையாட்டு போட்டியில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஸ்வப்னா பர்மன்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களின் தனித்துவமான திறமைகளால் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளார் ஸ்வப்னா பர்மன். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்த பின்னரே இந்த உயரத்தை எட்டியிருக்கிறார்.

ஹெப்டத்லான் என்பது 100 மீட்டர் தடை ஓட்டம், 200 மீட்டர், 800 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என 7 விளையாட்டுகளை உள்ளடக்கியது. இந்த அத்தனை விளையாட்டுகளிலும் ஈடுபட உடல் வலிமையும் கூடவே மன வலிமையும் அவசியம். அதற்கு தன்னை தயார் படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஸ்வப்னாவுக்கு பல்வேறு இடையூறுகள் பல வடிவங்களில் வந்தது. முதுகுவலி, பல் வலி என உடல் ரீதியான அவஸ்தைகளையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி ஓடி, வெற்றிக் கனியை ருசித்திருக்கிறார் இந்த சாதனைப் பெண். 

22 வயதான இவரின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களின் ஏழ்மையான குடும்பம் அவருக்கு பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் திறமைக்கு சரியான அங்கீகாரம் கொடுத்து கை தூக்கி உதவியது கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் தொண்டு நிறுவனம் தான். நோயால் பாதிக்கப்பட்ட தந்தை, ஏழ்மையான குடும்ப சூழல், உடல் நல குறைபாடு என ஸ்வப்னா முன் இருந்த தடைக்கற்கள் ஒவ்வொன்றும் இன்று அவருக்கு மணி மகுடங்களாகவே மாறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்

ஆடவர் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

42 views

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

200 views

பிற செய்திகள்

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் - சிலி வெற்றி

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணி ஜப்பானை பந்தாடியது.

27 views

இந்தியா Vs பாகிஸ்தான் - சுவாரஸ்ய நிகழ்வுகள்

பாகிஸ்தான், இந்திய அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழ்ந்தன. அதை தற்போது பார்க்கலாம்..

41 views

பிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் : உருகுவே அணி அபார வெற்றி

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஈக்குவேடார் அணியை வீழ்த்தியது

12 views

பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...

ரஷ்யாவில் நடைபெற்ற விமான பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

30 views

காயத்தால் இரண்டு போட்டிகளில் புவனேஷ்வர் குமார் இல்லை

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயத்தால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என கோலி தெரிவித்துள்ளார்.

16 views

வரலாற்று தோல்வி - மாற்ற முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தனது ஆதிக்க நடையை தொடர்கிறது. நேற்றைய போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை பார்க்கலாம்....

825 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.