கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேனின் 110வது பிறந்தநாள்

கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
கிரிக்கெட் உலகின் பிதாமகன் பிராட்மேனின் 110வது பிறந்தநாள்
x
கிரிக்கெட் உலகின் பிதாமகனாக கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேனின் 110வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கிரிக்கெட் உலகின் மூடி சூடா மன்னாக திகழம் டான் பிராட்மேனின் சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படவில்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரியாக 99 புள்ளி 94 ரன்கள் பிராட்மேன் குவித்துள்ளார். இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் பிராட்மேனின் இந்த சாதனையை கிட்ட கூட நெருங்கியது இல்லை. 

52 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பிராட்மேன் 6ஆயிரத்து996 ரன்கள் குவித்துள்ளார். இதில் 29 சதங்கள் அடங்கும். இது அவரது காலக்கட்டத்தில் உலக சாதனையாக கருதப்பட்டது. 29 சதங்களில் , இரண்டு முறை முச்சதம், 12 இரட்டை சதங்கள் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக டான் பிராட்மேன் விளங்கியுள்ளார். 

2001ஆம் ஆண்டு டான் பிராட்மேன் தனது 92 வது ஆண்டில் உயிர் இழந்தார். டான் பிராட்மேன் தனது கடைசி காலத்தில் கண்டு பிரமத்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான். சச்சினின் ஆட்டத்தை கண்ட டான் பிராட்மேன், தனது மனைவியிடம் இந்த இளைஞரின் ஆட்டத்தை காணும் போது தன்னைய பார்ப்பது போல் இருப்பதாக கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்