இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
x
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் எடுத்தது.பின்னர் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.  

மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. 84 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 51 ரன்கள் எடுத்தார். 
இதனைதொடர்ந்து 55வது ஓவரில் 162 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை வென்றது.


Next Story

மேலும் செய்திகள்