இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள்

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில், அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள்
x
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது அஸ்வினிடம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியின் போது இங்கிலாந்து வீரர்களை திசை திருப்ப, அஸ்வினும், தினேஷ் கார்த்திகுகம் தமிழில் பேசியுள்ளனர். மற்றொரு தமிழக வீரர் முரளி விஜய்யும் இந்தப் போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்