டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : கோவை கிங்ஸ் அணி வெற்றி

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : கோவை கிங்ஸ் அணி வெற்றி
x
நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற  கோவை கிங்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணி  20 ஒவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.159 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்