விம்பிள்டன் டென்னிஸ் : டென்னிஸ் வரலாற்றில் இடம் பிடித்த அரையிறுதி சுற்று

ஆறரை மணி நேரம் நீடித்த போராட்டம்
விம்பிள்டன் டென்னிஸ் : டென்னிஸ் வரலாற்றில் இடம் பிடித்த அரையிறுதி சுற்று
x
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி செட்டை கைப்பற்ற வீரர்கள் இடையே கடும் யுத்தம் நிலவியதால் போட்டி ஆறரை மணி நேரம் நீடித்தது.லண்டனில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் , தென்னாப்பிரிக்காவின் ஆண்டர்சன்  மற்றும் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ஆகியோர் மோதினர். இதில் ஆண்டர்சனும், ஜான் இஸ்னரும் 7-6, 6-7, 6-7, 6-4 என்று தலா இரண்டு செட்களை கைப்பற்றினர். கடைசி செட்டை வெல்பவரே போட்டியின் வெற்றியாளர் என்பதால் இரு வீரர்களும் விட்டு கொடுக்காமல் போட்டியை தொடர்ந்தனர்.6 மணி நேரம் 36 நிமிடம் போட்டி நீடித்ததால், மைதானத்தில் பரபரப்பு தொற்றியது.


Next Story

மேலும் செய்திகள்