முதல் அரை இறுதி : பிரான்ஸ் - பெல்ஜியம் மோதல்

உலக கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடைபெறவுள்ள முதல் அரை இறுதி போட்டியில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியுடன், பெல்ஜியம் அணி மோதுகிறது.
முதல் அரை இறுதி : பிரான்ஸ் - பெல்ஜியம் மோதல்
x
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழா, நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இந்த போட்டி, இரவு 11.30 மணிக்கு, செயின்ட்பீட்டர்ஸ் நகரில் துவங்குகிறது. இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டுவார்கள்  என்பதால், போட்டிகளை காண, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள், மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். 

Next Story

மேலும் செய்திகள்