உருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?

உருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?
உருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்?
x
உலக கோப்பை கால்பந்து தொடரில், இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும் முதல் காலிறுதி போட்டியில், உருகுவே - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. 2 முறை உலக கோப்பையை வென்ற உருகுவே அணி, இந்த போட்டி தொடரில், தோல்வி எதையும் தழுவவில்லை. பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை வீழ்த்தி, 6 - வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில்,  உருகுவே அணி களமிறங்க காத்திருக்கிறது. பிரான்ஸ் அணி நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய அர்ஜென்டினாவையே பந்தாடிய உத்வேகத்தில் உள்ளது. கிரிஸ்மேன், போக்பா, கெலியான் எம்பாப்பே உள்ளிட்ட பிரான்ஸ் வீரர்கள் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியான பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்