இந்தியா Vs இங்கிலாந்து- இன்று முதல் டி20 போட்டி : இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs இங்கிலாந்து- இன்று முதல் டி20 போட்டி : இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி
x
இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. மூன்று டி 20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் இங்கிலாந்தும், இந்தியாவும் மோதுகிறது. இந்த தொடரில் முதல் டி20 போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் போட்டியில் அசுர பலத்துடன் உள்ளது. இந்திய அணிக்கு கடும் சவால்கள் காத்துக்கொண்டு இருப்பதால்  இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தயுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்