உலகக் கோப்பை கால்பந்து போட்டி : ஜப்பான், செனகல், ரஷ்யா அணிகள் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டி : கொலம்பியாவை வீழ்த்தியது ஜப்பான், போலந்து அணியை வீழ்த்தியது செனகல் அணி, எகிப்து அணியை வீழ்த்தியது ரஷ்யா.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி : ஜப்பான், செனகல், ரஷ்யா அணிகள் வெற்றி
x
உலக கோப்பை கால்பந்து தொடர் : கொலம்பியாவை வீழ்த்தியது ஜப்பான்
உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி கொலம்பியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ரஷ்யாவின் சாரான்ஸ் நகரில் நடைபெற்ற எச்.பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி  கொலம்பியா அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற  இந்த போட்டியில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து தொடர் : போலந்து அணியை வீழ்த்தியது செனகல் அணி
மாஸ்கோவில் நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் செனகல் அணி போலந்து அணியை வீழ்த்தியது.எச் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் போலாந்து அணி செனகல் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2க்கு 1 என்ற கணக்கில் போலந்து அணியை செனகல் அணி வீழ்த்தியது. 

உலக கோப்பை கால்பந்து தொடர் : எகிப்து அணியை வீழ்த்தியது ரஷ்யா
செயிண்ட் பீட்டர்பர்க்கில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ரஷ்யா அணி எகிப்து அணியை எதிர்கொண்டது. இதில் ரஷ்ய அணி 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்