ஐ.பி.எல் போட்டியை காண சென்னை அணி ரசிகர்களுக்கு சிறப்பு ரயில்

புனேவில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை காண சென்னை அணி ரசிகர்களுக்கு என தனி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் போட்டியை காண சென்னை அணி ரசிகர்களுக்கு சிறப்பு ரயில்
x
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை புறப்பட்ட 13 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் சென்னை அணியின் ஆயிரம் ரசிகர்கள் பயணம் செய்தனர்.  ரசிகர்களுக்கான உணவு, தங்கும் செலவு, டிக்கெட் ஆகியவற்றை சென்னை அணி நிர்வாகமே ஏற்றுள்ளது.  இதே போன்று புனேவில் நடைபெறும் மற்ற போட்டிகளுக்கும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு உள்தாக சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. புனேவில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோத உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்