மழை-வெள்ளம் பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா..? அமைச்சர் விளக்கம்

x

பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு வினா வங்கி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழையை தொடர்ந்து 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் பாடப்புத்தக பாதிப்புகள் குறித்து கணக்கீடு பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். இதனிடையே, கனமழைக்குப்பின் பள்ளிகளில் நிலவும் சூழல், மாணவர்களுக்கான திட்டங்கள், பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்