தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

x

நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான விஜயகாந்த் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த சாதனையாளர் என்று முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்... "குடும்ப நண்பராக தன்னிடம் பழகியவர்... முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது என்றென்றும் தனிப்பாசம் கொண்டவர்" என தன் நினைவுகளை முதல்வர் பகிர்ந்து கொண்டார்... முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனத்தில் விஜயகாந்த் கதாநாயகனான நடித்த 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில் தன் தந்தை எழுதிய பாடல் காட்சியில் தானும் பங்கேற்றிருந்தது நினைவில் மலர்வதாக குறிப்பிட்டுள்ளார் முதல்வர்... அவருடனான நட்பு எந்தக் காலத்திலும், எத்தகைய அரசியல் சூழலிலும் மாறவேயில்லை என்றும் இயற்கை இரக்கமின்றி தன் நண்பரின் வாழ்வை எடுத்துக் கொண்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார். கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பு என தெரிவித்த முதல்வர், விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்